அன்பு, கருணை வடிவமான வள்ளலார் வழியில் பயணிப்போம்; முதல்வர் விஜய்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2026 01:10
சென்னை: வள்ளலார் பிறந்த நாளையொட்டி அவரது அறிக்கை; அவர் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன். பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலாரின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன. உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு, கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.