Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூர் சத்திய ஞான சபையில் மாதாந்திர ... இந்திர ஏகாதசி விரதம்; இதை படிங்க.. இப்பிறப்பு மட்டுமல்ல இறப்பிற்கு பிறகும் பலன் கிடைக்கும்! இந்திர ஏகாதசி விரதம்; இதை படிங்க.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி மலைக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வனத்துறை பச்சைக்கொடி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி மலைக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வனத்துறை பச்சைக்கொடி!

பதிவு செய்த நாள்

05 அக்
2026
11:10

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 48 கோடி ரூபாயில் மாற்று மலைப்பாதை திட்ட பணிகள் தொடங்குவதற்கு, வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 2.77 கோடி ரூபாயை தரை வாடகையாக செலுத்தி விட்டு, மாற்று மலைப்பாதை பணிகளை உடனே தொடங்கிக் கொள்ளலாம் என, வனத்துறையினர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்புதல் அளித்துள்ளனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, வேன், கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம், மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.


முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் சென்று வர, ஒரே ஒரு மலைப் பாதை மட்டுமே உள்ளதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்கள், முகூர்த்த நாள் மற்றும் முக்கிய விழா ஆகிய நாட்களில், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், ஒன்றரை கி.மீ., துாரம் கடக்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. மேலும், பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.


இதையடுத்து, கடந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கு, மாற்று மலைப்பாதை திட்டம் கொண்டு வந்து, அதற்காக 48 கோடி ரூபாய் அரசே நிதி ஒதுக்கீடு செய்யும் என அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. மாற்று மலைப்பாதை திருத்தணி – சித்துார் நெடுஞ்சாலை குமாரக்குப்பம் பகுதியில் இருந்து, மேல்திருத்தணி வழியாக, மலைக்கோவிலுக்கு, 2 கி.மீ., துாரம் மாற்றுப்பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தியது.


அதாவது, தனியார் நபர்களிடம், இருந்து 2.65 ஏக்கர் நிலம், வனத்துறை கட்டுபாட்டில் உள்ள 0.82 சென்ட், சாலை புறம்போக்கு 0.22 சென்ட், கால்வாய் புறம்போக்கு 0.29 சென்ட், கோவில் நிலம் 0.68 சென்ட் நிலம் போன்றவை கையகப்படுத்தப்பட்டன. அதாவது, தனியார் நபர் நிலம் 890 மீட்டர், வனத்துறை நிலம் 690 மீட்டர், சாலை புறம்போக்கு 70 மீட்டர், கால்வாய் புறம்போக்கு 100 மீட்டர், கோவில் நிலம் 250 மீட்டர் என, மொத்தம் 2 கி.மீ., நீளம், 12 மீட்டர் அகலத்தில் தார்ச்சாலை போடப்படுகிறது.


இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முருகன் மலைக்கோவிலுக்கு மாற்று மலைப்பாதைக்கு தேவையான நிலத்தை தனி நபர்களிடம் இருந்து, 6.50 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கி, கோவில் பெயருக்கு நிலம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அதே போல், அரசு புறம்போக்கு மற்றும் வனத்துறை நிலம் கோவில் பெயரில் கையகப்படுத்தப்பட்டது. இதில், வனத்துறை வழங்கிய நிலத்தில் சாலை அமைக்க, இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவதற்கும், சாலை அமைத்து, 25 ஆண்டுகள் வரை பயன்படுத்துவதற்கும், தரை வாடகையாக, 2.77 கோடி ரூபாய் செலுத்தினால், உடனே சாலைப் பணிகளை தொடங்கிக் கொள்ளலாம் என, வனத்துறையினர் என கடிதம் அனுப்பியுள்ளது.


இந்த தொகையை, கோவில் நிதியில் இருந்து செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் பரிந்துரை செய்துள்ளோம். இதற்கான அனுமதி இம்மாதத்திற்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, மாற்று மலைப்பாதை அமைக்கும் பணி, திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் ஒப்படைக்கப்படும். ஓராண்டுக்குள் மாற்று மலைப்பாதை அமைத்து தருவதாக, நெடுஞ்சாலை துறையினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


நெரிசலுக்கு நிரந்தர தீர்வு: முருகன் மலைக்கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தால், பெங்களூரு, குடியாத்தம், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, சித்துார், ராணிபேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும்.


இப்பகுதிகளில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள், திருத்தணி நகருக்குள் வராமல், மேல்திருத்தணி வழியாக நேரடியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிக்கலாம். மேலும், அதே வழியில் மேற்கண்ட இடங்களுக்கு திரும்பிச் செல்லலாம். இதனால், திருத்தணி ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, மலைப்பாதை மற்றும் சித்துார் சாலை ஆகிய இடங்களில், போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால், விபத்துகளும் தவிர்க்கப்படும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar