Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவாழக்கரை அஷ்டாதச பூஜ மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி நான்காவது சனி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி நான்காவது சனி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

10 அக்
2026
02:10

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை விழாவில், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, கோவிந்தா கோஷத்துடன் அரங்கநாதர் பெருமாளை வழிபட்டனர்.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை விழா விமர்சையாக நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் வளம் வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு திருவாராதனும், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் ஆகியவை செய்யப்பட்டது. அதன் பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின், பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். கோவில் வெளியே அமர்ந்திருந்த தாசர்களிடம் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை படையளிட்டனர். பின்பு தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறிகளை பெற்றுச் சென்றனர். வரும் 2ம் தேதி நவராத்திரி உற்சவம் விழா துவங்க உள்ளது. 17ம் தேதி ஐந்தாவது சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. அக்.,20ம் தேதி சரஸ்வதி பூஜையும், 21ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar