Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 அக்
2026
03:10

மயிலாடுதுறை: வடரங்கம் பால வடரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள வடரங்கம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ரங்கநாயகி சமேத பால வட ரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இத்தலத்தில் பெருமாளையும், தாயாரையும் வழிபடுபவருக்கு நிறைந்த செல்வமும், மகிழ்வான வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான இன்று ரங்க நாயகி சமேத பால வடரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீப ஆராதனையும் நடைபெற்றது. தாயாருடன் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலாவாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் எழுந்தருளினார். இதனை அடுத்து கிராம மக்கள் வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து திருமண சீர் வரிசைகளை எடுத்து  வந்தனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை நடந்தது. 12 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், மங்கள ஆரத்தி நடந்தது. பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். வடரங்கம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு பெருமாளையும் தாயாரையும் தரிசித்து மனமுருக பிரார்த்தனை செய்தனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் செய்திருந்தார். ஆனைக்காரன் சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar