பதிவு செய்த நாள்
11
அக்
2026
12:10
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆஸ்தான வித்வான் தாரமங்கலம் சுப்பிரமணிய சாஸ்திரிகள் தமது 91வது வயதில் பெங்களூரில் காலமானார். இவர் பாட்டனார் காலம் முதல் ஐந்து பீடாதிபதிகளின் அனுக்கிரஹத்துக்கு பாத்திரமாகிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைத சித்தாந்தங்களையும் முறையே தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், ரகோத்தமாச்சாரியார் ஆகியோரிடம் பயின்றார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
ராமாயணம், பாகவதம், பாரதம், தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும் உபன்யாசம் செய்யும் திறனும் கொண்டவர். கோரக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பல புத்தகங்களுக்கு சுப்பிரமணிய சாஸ்திரி உரை எழுதி உள்ளார். ஸ்ரீ சாக்த உபாசனையில் வல்லுனராக திகழ்ந்து பல பேருக்கு வழிகாட்டியவர். இவரது அந்திம காரியங்கள் பெங்களூரில் நடந்தன.