Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி ... எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்று வினோத வழிபாடு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நவராத்திரி இரண்டாம் நாள். சந்திர தரிசனம்: அம்பாளை வழிபட நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று நவராத்திரி இரண்டாம் நாள். சந்திர தரிசனம்: அம்பாளை வழிபட நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்!

பதிவு செய்த நாள்

12 அக்
2026
10:10

சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி உண்டு. நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு, சகல நலங்களையும் தருவேன் என, அம்பிகையே அருள்பாலிக்கிறாள்.  இன்று அம்பிகையை மகிஷாசுரனை வதம் செய்த ராஜராஜேஸ்வரியாக அலங்காரம் செய்ய வேண்டும்.  கோதுமை மாக்கோலம் இட்டு தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரை நைவேத்யம் செய்து அம்மனை வழிபட வேண்டும். 


நவராத்திரி இரண்டாம் நாளான இன்று, மகிஷனை வதம் செய்ய புறப்படும் வராஹி வடிவத்தில், ராஜராஜேஸ்வரி தோற்றமளிப்பாள். வராஹி நந்த நாதருக்கு, வராஹி ரூபத்தில் தோற்றமளித்ததால், இந்தப்பெயர் ஏற்பட்டது. ஈசனின் பாதியாக இருப்பதால், பக்தர்களின் இடர்களை களைந்து காப்பாற்றுபவளாக இருக்கிறாள். சகல வளங்களையும் கொடுப்பவள் என, நம்பப்படுகிறது. அதனாலேயே, சூலமும், உலக்கையும் இவளின் ஆயுதங்களாய் உள்ளன. புரட்டாசி சோமவாரமான இன்று, அம்மனை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. பிற நாட்களை விட இந்த நாளில் வழிபடுவது, பலமடங்கு பலன்களை தரும். அம்மனை முல்லை மலரால் அலங்கரித்து, துளசி இலையினால் அர்ச்சனை செய்ய வேண்டும். வாசமிக்க மருவு இலையையும் இணைத்துக் கொள்வது நல்லது.கோதுமை மாவினால், கட்டம் கோலம் போட வேண்டும். நிவேதனத்துக்கு, மாம்பழம் வைப்பது நல்லது. காலை, புளி சாதம் படைக்கலாம்; மாலை, தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் செய்து, பிரசாதமாய் கொடுக்கலாம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், நவ தானியங்களால் சுண்டல் செய்து கொடுத்து, நாமும் சாப்பிடுவது, அந்த பருவ காலத்தில், சீதோஷ்ண மாற்றத்தால் வரும் தோல் பிரச்னைகளை சரிசெய்வதற்கும் ஏற்றது என்பதை, ஆன்மிகத்தோடு, அறிவியலாகவும் தெரிந்து கொள்வோம். நம் சொந்த குழந்தையாக இல்லாமல், பிறர் வீட்டு குழந்தைகளை வரவழைத்து அலங்கரித்து, திருமூர்த்தியாக பாவிக்கலாம். இன்று கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளை வழிபட நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்!


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றிய மணக்குடி, கோவிலாப்பட்டியில் சமண தீர்த்தங்கரர்களை தரிசித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar