தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், நவராத்திரி விழா நேற்று (11ம் தேதி ) துவங்கி, வரும் அக்.20ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் , தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நவராத்திரி கலை விழாவின், தொடக்க நிகழ்ச்சியாக, பெரியநாயகி அம்மனுக்கு (11ம் தேதி) மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12ம் தேதி, மீனாட்சி அலங்காரத்துடனும், 13ம் தேதி சதஸ் அலங்காரம், 14ம் தேதி காயத்ரி அலங்காரம், 15ம் தேதி அன்னபூரணி அலங்காரம் , 16ம் தேதி கெஜலெட்சுமி அலங்காரம், 17ம் தேதி சரஸ்வதி அலங்காரம், 18ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம் , 19ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 20ம் தேதி விஜயதசமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.