திருவாடானை கோயிலில் சுவாமி ஊர்வலத்திற்கு புதிய தேர் அமைப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 04:10
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா அன்று சுவாமி ஊர்வலம் செல்ல தாமிர தகடுகளால் வடிவமைக்கபட்ட புதிய தேர் அமைக்கப்பட்டுள்ளது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இது தவிர பிரதோஷ விழாவும் சிறப்பாக நடைபெறும். அப்போது ஆதி ரெத்தினேஸ்வரரும், சிநேகவல்லி அம்மனும் ரிஷப வாகனத்தில் பிராகரத்தை சுற்றி வருவது வழக்கம். இந்நிலையில் புதிய தேர் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்தது. இதற்காக தாமிர தகடுகளால் கலைநயத்துடன் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நேற்று கோயிலுக்கு வந்தடைந்தது. ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்திய பின் விரைவில் தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக சிவாச்சாரியர்கள் கூறினர்.