Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி மூன்றாம் நாள்: கோலாட்ட ... இன்று நவராத்திரி மூன்றாம் நாள்: அம்பிகையை வராகியாக அலங்கரித்து வழிபட குறையில்லாத வாழ்வு கிடைக்கும்! இன்று நவராத்திரி மூன்றாம் நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோகைமலை கோவிலில் பழைய முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தோகைமலை கோவிலில் பழைய முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

13 அக்
2026
10:10

குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, 1,000 ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில், 2025 நவ., 27ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின், கோவிலில் இருந்த பாலதண்டாயுதபாணி சிலை மாற்றப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவிலில் ஆய்வு செய்தனர். அதில், அர்ச்சகர் கிருஷ்ணமுர்த்தி, மூலவர் சிலையை மாற்றியதை அறிந்தனர். பழைய சிலை, அருகில் இருந்த சுனையில் இருந்து கடந்த ஜன., 20ல், மீட்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் புகாரில், தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து, ஆக., 18ல் கிருஷ்ணமுர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில், தோகைமலையை சேர்ந்த சங்கிலி முத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், பழைய சிலையை மீண்டும் நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று காலை பழைய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கருவாழக்கரையில்  அஷ்டாதச புஜ மகாலட்சுமி ஸ்ரீ துர்கா தேவி ஆலயத்தில் நடைபெற்ற சதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar