புதுச்சேரியில் சத சண்டி மகா ஹோமம் நாராயணி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2026 11:10
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதுச்சேரி, தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று சண்டி மகாதேவி நாரயணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலையும், மாலையும், பூஜை, ேஹாமம், தீபாராதனை, அன்னதாம் நடந்தது. மாலையில், புதுச்சேரி புனிதா ஹரிகிருஷ்ணனின் ரசிக மதுரா நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.