குன்றத்துார் முருகன் கோவிலில் அன்னதான திட்டம் விரிவாக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2026 05:10
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், அன்னதானம் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் ரமேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஹிந்து சமய அறநிலைையத் துறை சார்பில், தினமும் மதியம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் 200 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தின் விரிவாக்க விழா நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்று, பக்தர்களுக்கு உணவு பரிமாறி அன்னதான திட்டத்தை தொடக்கி வைத்து, பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.