இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
1999-ம் ஆண்டு இஸ்ரேலில் பிறந்த இவரது பெற்றோர், ஏற்கெனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றி வந்தனர். மகனுக்குச் சிறந்த கல்வி அளிக்க இந்தியாவுக்கு அழைத்து வந்து, பாரம்பரிய குருகுலத்தில் சேர்த்தனர்.அங்கு வேத மந்திரங்கள், யாகங்கள், சமஸ்கிருதம், வேத தத்துவங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 12 ஆண்டுகள் குருகுலக் கல்வியை நிறைவு செய்த பிறகு, ‘மந்திர சாதனா’ (Mantra Sadhana) என்ற திட்டத்தைத் தொடங்கினார். இனம், நிறம், பிறப்பு என எந்தப் பாகுபாடும் இன்றி, சனாதன தர்மத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், சனாதன தர்மத்தை அனைவரும் பின்பற்றத் தொடங்க வேண்டும் என்றும், அதன் ஆன்மிகக் கருத்துகளையும் பாரம்பரியத்தையும் உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.