கடல் கடந்த நவராத்திரி கொண்டாட்டம்: நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2026 06:10
நியூயார்க்; ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 9 நாட்கள் உற்சாகமாக கொண்டாட்டம் நடக்கும். கோல்கட்டாவில் முன்பு இல்லாத வகையில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் குஜராத்திலும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளிலும் நவராத்திரியை ஹிந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. இந்திய பாரம்பரிய உடை அணிந்துவந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் கர்பா நடனமாடி நவராத்திரியை உற்சாகமாக கொண்டாடினர். இதனை பார்த்தவர்கள், கைகளை தட்டி மகிழ்ச்சியைவெளிப்படுத்தினர். குஜராத்தில் நவராத்திரி பண்டிகையை கர்பா நடனமாடி கொண்டாடுவது வழக்கம். அதேபோல், டைம்ஸ் சதுக்கத்திலும் கொண்டாடியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.