Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவில் ... சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனுக்காக அரவணை உற்பத்தி தொடங்கியது சபரிமலையில் மண்டல மகர விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருகே பல்லவர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி அருகே பல்லவர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

14 அக்
2026
05:10

செஞ்சி: செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில், பல்லவர் காலத்தை சேர்ந்த கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பென்னகர் கிராமத்தில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனுசாமி தலைமையில், செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர் மற்றும் தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவர்கள் கள ஆய்வு செய்தனர். அப்போது, பென்னகரில் இருந்து கருங்குழி செல்லும் சாலையில் ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாறையில் 8 வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தனர். 


இதுகுறித்து முனைவர் சுதாகர் கூறியதாவது: கல்வெட்டை ஆய்வு செய்ததில், பல்லவ மன்னன் கம்பவர்மனின் 20-வது ஆட்சியாண்டான கி.பி. 870-ம் ஆண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. இதில், சிங்கபு நாட்டின் கீழ்வழியில் உள்ள தேனூரைச் சேர்ந்த அரையன் என்பவர் காடுகளைத் திருத்தி விளைநிலங்களாக மாற்றியதும், வடக்குப் பகுதியில் நிலத்தைச் சீரமைத்து குடிகளை அமர்த்தி ஊர்  உருவாக்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் விவசாயத்தை விரிவுபடுத்தவும், புதிய குடியிருப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துகொள்ள இக்கல்வெட்டு முக்கிய வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது. செஞ்சியைச் சுற்றி கிடைக்கும் கல்வெட்டுகள் நீர் சேமிப்பு, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உருவாக்கம் குறித்த தகவல்களைத் தருகின்றன. பழமையான வரலாற்றுச் சான்றாக விளங்கும் இந்த கல்வெட்டை சிதைவடையாமல் பாதுகாக்க, ஊர் மக்களும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முனைவர் சுதாகர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar