சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனுக்காக அரவணை உற்பத்தி தொடங்கியது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 05:10
சபரிமலை: சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனுக்கு முன்னோடியாக முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை தயாரிப்பு இன்று காலை தொடங்கியது.
சபரிமலையில் முக்கிய வழிபாடு பிரசாதம் அரவணை ஒரு டின் 100 ரூபாய் ஆகும். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் அரவணை பிளான்டில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை அரவணை உற்பத்தி தொடங்கியது. தினமும் ஒன்றரை லட்சம் டின் அரவணை மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் புதிய திட்டத்தின் படி தினமும் 3. 25 முதல் 3.65 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மண்டல மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தேவைக்கேற்ப அரவணை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.