பதிவு செய்த நாள்
09
பிப்
2013
10:02
திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, வீரராகவரின் அவதார தின மகோற்சவம் இன்று நடைபெறுகிறது. சிரவண நட்சத்திரம் கூடிய தை அமாவாசையான இன்று, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், வீர ராகவரின் அவதார தின மகோற்சவம் நடைபெறுகிறது. இதை ஒட்டி, இன்று மதியம், 12:00 மணிக்கு, 108 கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது. இரவு, 8:30 மணிக்கு உற்சவர் வீரராகவர் விசேஷ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பின், வாணவேடிக்கைகளுடன் சிறப்பு வாத்தியங்கள் முழங்க, உற்சவர் நான்கு வீதிகளில் வலம் வருகிறார். திருமங்கை ஆழ்வார், திருமழிசை பிரானாலும் மங்களா சாசனம் செய்யப்பட்டு, புண்ணியா வர்த்த ஷேத்திரத்தில், சாளி ஹோத்ர முனிவருக்கு, தை அமாவாசையன்று காட்சி அளித்தார். அம் முனிவரின் பிரார்த்தனைக்கு இணங்கி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, நாகணையில் கண் துயிலும் திருஎவ்வுள் கிடந்தான் (வீரராகவர்) அருள் பாலிக்கிறார். இந்த அவதார தின மகோற்சவம், ஸ்ரீ எவ்வுள் கிடந்தான் கைங்கர்ய சபா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, விமரிசையாக நடத்தப்படுகிறது.