காஞ்சிபுரம்: உலக மக்கள் நன்மைக்காக காஞ்சிபுரத்தில் உள்ள மகா பெரியவர் தரிசன மண்டபத்தில், கோடி அர்ச்சனை துவங்கியது.காஞ்சிபுரம் சங்கரமடத்தில், 68வது பீடாதிபதியாக மகா பெரியவர், காஞ்சிபுரம் அருகில் உள்ள தேனம்பாக்கத்தை சேர்ந்த, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், நீண்ட காலம் தங்கி தவம் செய்தார். அந்தக் கோவிலில், பூஜை சரியாக நடக்க வேண்டும் என்பதற்காக, ஸ்ரீ சிவாஸ்தானம் நித்ய பூஜா டிரஸ்ட் துவக்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்ட் சார்பில், காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள, மகா பெரியவர் தரிசன மண்டபத்தில், உலக மக்கள் நன்மைக்காக, கடந்த 5ம் தேதி கோடி அர்ச்சனை துவங்கியது. மே மாதம் 25ம் தேதி வரை, கோடி அர்ச்சனை நடைபெறும்.