பதிவு செய்த நாள்
26
அக்
2026
10:10
விழுப்புரம்
விழுப்புரம் பிரஹன்னநாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை 6:30 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பின், இரவு 10:00 மணிக்கு மூலவர் மீது சாற்றப்பட்ட அன்னம் கலைக்கப்பட்டு, சண்டிகேஸ்வரர் பெருமானுக்கு வழிபாடு நடந்தது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் புவனேஸ்வரர், புவனேஸ்வரி அம்மன், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மேலும், ஆசூரில் அழகம்மை உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து அன்னத்தாலும் மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை நடந்தது.
செஞ்சி
செஞ்சி அடுத்த மேலச்சேரி பிரஹன்ன நாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து நேற்று மாலை அன்னாபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதேபோல் ஜெயங்கொண்டான் தையல்நாயகி உடனுறை ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், தையூர், தையல்நாயகி உடனுறை தடுத்தாண்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. பக்தர்கள் பலர் குடும்த்தினருடன் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
* வைத்தியநாத சுவாமி கோயிலில் காலை 7:00 மணிக்கு மேல் வைத்தியநாதர், சிவகாமி அம்பாளுக்கு கும்பம் வைத்து ஹோமம் வளர்த்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் காலை 11:00 மணிக்கு 100 கிலோ அரிசியில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, சிவசகஸ்வர நாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
* ராஜபாளையத்தில் மாயூர நாத சுவாமி கோயில், சொக்கர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், பர்வத வர்த்தினி அம்மன் கோயில், கருப்பஞானியார், பொன்னப்ப ஞானியார் கோயில், குருசாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாதர் கோயில், பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், சத்திரப்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், சேத்துார் திருக்கண்ணீஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் உள்ளிட்ட கோயில்களில் விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை மங்களநாதர்சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. 18 வகையான அபிஷேகம் செய்து, 51 படி அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு, மங்களநாதர் சிவலிங்கம் மீது அன்னத்தால் சாற்றப் பட்டது. காய்கறிகள், பழங்கள் இவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமேனியில் சாற்றப்பட்ட சோறு கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் மீன்களுக்கு இரையாக்கப்பட்டது. பின் வீதியுலா புறப்பாடு நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி மகா சித்தர் பீடத்தில், ஐப்பசி மாத அன்னாபிஷேக வைபவமும், புதிதாக பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் குறைதீர்க்கும் கருப்பர் சுவாமி உற்சவர் பிரதிஷ்டை வைபவமும் நடந்தது. இப்பீடத்தில் எழுந்தருளியுள்ள வைத்தீஸ்வரர் உடனமர் மங்களாம்பிகை, ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அகத்தியர், போகர் உட்பட பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. விழா ஏற்பாடுகளை, மயூரம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
உடுமலை
ஐப்பசி பவுர்ணமியையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில் நடந்த அன்னாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத பவுர்ணமியில், சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, மூலவர் திருமேனிக்கு, அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பல்வேறு நைவேத்தியங்களும், 11 வகையான சாதங்களும் படைத்து தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்நாதர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
சோமவாரப்பட்டியிலுள்ள பழமை வாய்ந்த அமரபுயங்கீஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
புதுச்சேரி
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று மதியம் 3:00 மணிக்கு அன்னாபிஷேக அலங்காரப் பணிகள் தொடங்கின. இதற்காக 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட அன்னம், 100 கிலோ காய்கறிகள், 50 கிலோ பழங்கள், 10 கிலோ இனிப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றைக் கொண்டு மூலவர் குரு சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரப் பணிகள் இரவு 7:30 மணிக்கு நிறைவடைந்தன. தொடர்ந்து, திரை விலக்கப்பட்டு அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அன்னாபிஷேகத்தை தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின், அன்னம் கலைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது. மீதமிருந்த அன்னம் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர், சாம்பார், எலுமிச்சை சாதம் மற்றும் இனிப்புகளுடன் சேர்த்து பிரசாதம் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னாபிஷேக விழாவில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
புதுச்சேரி
இடையார்பாளையம் நாணமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின், 100 கிலோ அரிசி மற்றும் 70 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்பட்டு, அன்னாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிவகணேச கந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாதத்தால் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த சிவபெருமானை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேவாரப் பாடல்களைப் பாடியும் வழிபட்டனர்.
பெரியகுளம்
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வர், ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கும், தையல் நாயகி அம்மன் கோயிலில் வைத்தீஸ்வருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் சிவன் அன்னாபிஷேகம், கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் அன்னதானம் நடந்தது. சுருளியாற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்திருந்தார்.
போடி
சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அன்னாபிஷேக அலங் காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மேலச்சொக்நாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், குலாலர்பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம் மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்ர காளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
திருத்தணி
திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசியால் மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு சுவாமி மீது சார்த்தப்பட்டிருந்த அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவில், திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம் சரவணப்பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பள்ளிப்பட்டு காமாட்சியம்மன் சமேத சங்கமேஸ்வரர் கோவில், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
கரிம்பேடு ஞானாம்பிகை சமேத நாதாதீஸ்வரர் கோவில், ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துார் வீரட்டானேஸ்வரர் கோவில், ஸ்ரீகாளிகாபுரம் பஞ்சாட்சர மலை மரகதேஸ்வரர் மலைக்கோவிலிலும், நேற்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நடந்த, அன்னாபிஷேக வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலையில், மூலவருக்கு மகா அபிஷேகம், அதனை தொடர்ந்து அன்னாபிஷேம் நடந்தது. பச்சரிசி சாதம், காய்கறிகளை கொண்டு சிவலிங்கத்துக்கு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இரண்டு மணி நேரம் வரை, அன்னாபிஷேக கோலத்தில் காட்சியளித்த சுக்ரீஸ்வரரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவில்; லட்சுமி நகர், அண்ணாமலையார் கோவில்; அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில்; அபிஷேகபுரம் அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில்; சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில்; செட்டிபாளையம் அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிேஷக பூஜைகள் விமரிசையாக நடந்தன. ஏராளமான பக்தர்கள், அன்னாபிஷேக அலங்காரத்தை கண்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி அன்னாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம், பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
ஐப்பசி பவுர்ணமி திதி சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் சந்திரனின் ஒளியும், சக்தியும் முழுமையான 16 கலைகளுடன் பூமிக்குக் கிடைப்பதாக ஐதீகம். பிரம்மனின் கர்வத்தை அடக்க சிவபெருமான் அவரது ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை சிவனின் கையைத் தொடர்ந்து கவ்விக்கொண்டதால், பிரம்மஹத்தி தோஷம் பிடித்து யாசகப் பாத்திரமாக மாறியது. பல தலங்களுக்குச் சென்று ஈசன் யாசகம் கேட்டும் அந்த கபாலம் நிறையவில்லை. இறுதியாக காசிக்குச் சென்றபோது, அங்கே அன்னபூரணி தேவி தோன்றி சிவபெருமானுக்கு அன்னத்தை அள்ளி, யாசக பாத்திரத்தில் இட்டாள். அந்த அன்னத்தால் கபாலம் நிறைந்து, சிவனின் கையைவிட்டுப் பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. ஈசனும் தோஷ நிவர்த்தி பெற்றார். அன்னபூரணிதேவி, சிவபெருமானுக்கு அன்னமிட்டு உலக உயிர்களின் பசி தீர்த்த நாளே ஐப்பசி பவுர்ணமி தினமாகும். இதன் நினைவாக சிவாலயங்களில் ஈசனுக்கு அன்னாபிஷேகம் தொன்றுதொட்டு நடத்தப்படுகிறது.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று ஐப்பசி அன்னாபிஷேகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயில் காளஹஸ்தீஸ்வரர், பத்மகீரிஸ்வரருக்கு சிறப்புத் திரவிய அபிஷேகங்கள் நடந்தன. இரவில் லிங்கத் திருமேனி முழுவதும் பச்சரிசி சாதத்தால் மூடப்பட்டு, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு மகா அன்னாபிஷேக பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஈசனைத் தரிசித்தனர். இதுபோல் கூட்டுறவு நகர் காசி விஸ்வநாதர், ஆர்.எம்.காலனி குபேர லிங்கேஸ்வரர், தவசிமடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் அன்னாபிஷேகம் நடந்தது.
நத்தம்
கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பச்சரிசியால் தயார் செய்யப்பட்ட சாதத்தை கைலாசநாதர் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தன. மூலவர் கைலாசநாதர், செண்பக வள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சுற்றுப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள சிவசக்தி அம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜையும், அன்னாபிஷேக விழாவும் நடந்தது. அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னாபிஷேக விழா நடந்தது. லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடமதுரை
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் உள்பட திரவிய அபிஷேகங்களும், தொடரந்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு, விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பழநி
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாவுடையார் கோயிலில் கலச பூஜை நடந்தது. பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர் கோயில் வெளிப் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டு உச்சிக்கால பூஜையில் அபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதனபுரம் அண்ணாமலை உண்ணாமலை நாயகி அம்மன் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், புதுநகர் யோகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று ஈசன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.
சென்னை
பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி கோவில் வளாகம், பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டதோடு, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. * அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ரத்னகிரீஸ்வரரை, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அச்சிறுபாக்கம்
அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில், புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வழிபாடு நேற்று விமரிசையாக நடந்தது. 500 கிலோ அரிசி சாதம் மற்றும் காய்கறி, பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு, மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
செய்யூர்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, முகையூர் கனகபுரீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. செய்யூர் அடுத்த முகையூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பழமையான சொர்ணாம்பிகை உடனுறை கனகபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மஹாசிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட விஷே ச நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம. அதன்படி, கனகபுரீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை அன்னாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் முகையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், ஆதி சங்கரர் கோயிலில் கவுரி கைலாசநாதர், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் திருக்கயிலேஸ்வரர், கலங்காது கண்ட விநாயகர் கோயிலில் ஐந்நூற்றீஸ்வரர், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், நயினார்வயல் அகத்தீஸ்வரர், ஆலமரத்து முனீஸ்வரர் சுவாமிக்கும் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவனுக்கு அன்னாபிேஷக அபிேஷகம் நடந்தது. சாதம், காய் கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து பவுர்ணமி பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மானாமதுரை
மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேக விழாவிற்காக சோமநாதர் சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி, காய்கறிகள் மூலம் தயாரித்த அன்னத்தால் அபிஷேகம் செய்தனர். வேம்பத்துார் கைலாசநாதர், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
கோவை
கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ கோஷங்களை எழுப்பி உணர்ச்சி பெருக்கோடு சாமி தரிசனம் செய்தனர். கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் மாலை 6:30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, மூலவர் சங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பழம், காய்கறி, இனிப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
ராம்நகர் ராமர் கோயிலில் ஆபத்சஹாயலிங்கேஸ்வரர் சன்னிதி, தடாகம் சாலை மாதேஸ்வரன், சுக்கிரவார் பேட்டை பசுவண்ணன், பூமார்க்கெட் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர், கோயில்பாளையம் காலகாலேஸ்வரர், வடமதுரை விருந்தீஸ்வரர், பேரூர் பட்டீஸ்வரர், பூண்டி வெள்ளிங்கிரியாண்டவர், இடிகரை வில்லீஸ்வரர், சித்தாபுதூர் சக்தி விநாயகர் பாலமுருகன் கோயிலில் உள்ள நீலகண்டேஸ்வரர், வெள்ளலுார் தேனீஸ்வரர், சித்தலிங்கேஸ்வரர் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையோரம் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கைலாசநாதர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மஹா அன்னாபிஷேக விழா நேற்று, நடைபெற்றது. மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னம் மற்றும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
* காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் வடிவுடையாம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை 21 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 3:00 மணி அளவில் அன்னாபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, அன்னாபிஷேகத்திற்கு பயன்படுத்திய உணவுப்பொருட்களை சிவாச்சாரியர் பிரசாதமாக வழங்கினார்.
* திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர், தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர், உள்ளாவூர் அகத்தீஸ்வரர், கோவிந்தவாடி கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தன.
கடலுார்
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை விநாயகர், முருகர், அப்பர், பைரவர், நவக்கிரகங்கள் என, அனைத்து சுவாமிகளுக்கும் எண்ணெய் காப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை சாய் ரட்ச பூஜை நடந்தது. பாடலீஸ்வரருக்கு, 108 கிலோ அன்னம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாடலீஸ்வரர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், பெரியநாயகி அம்மன் தங்க கவசத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார், மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர், கம்மியம்பேட்டை புறவழிச்சாலை வில்வநாதீஸ்வரர், புருகீஸ்பேட்டை சுப்ரமணியர், வண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஆல்பேட்டை வெட்டவெளி சித்தர் பீடத்தில் சிறப்பு அலங்காரம் நடந்தது.
நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சிவன் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று மாலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:00 மணிக்கு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.விழாவில் பக்தர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாதம் பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, விநாயகர், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு 100 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட அன்னத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் சுவாமிக்கு வைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம், அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் 100 கிலோ அரிசியால் அன்னம் வடித்து கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்து தீபாராதனை செய்தனர். பூஜைகள் முடிந்து கைலாசநாதருக்கு செய்த அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு கைலாசநாதர் அருள்பாலித்தார். எய்தனுார் ஆதிபுரீஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருக்கண்டேஸ்வரம், நடனபாதேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், பூலோகநாதர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
நடுவீரப்பட்டு
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் மற்றும் சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
திட்டக்குடி
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னாபிேஷகம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள் தாயார் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மதியம் 2:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 3:00 மணிக்கு சுவாமிக்கு அன்னம் சாற்றி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவபுராணம், வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் அன்ன அர்த்தசாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சமபந்தி போஜனம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.