அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
அவலுார்பேட்டையில் ராஜகணபதி கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நிறைவையொட்டி, நேற்று காலையில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
அதனையொட்டி கோவிலில் யாக சாலை பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், ஆரிய வைசிய சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.