பதிவு செய்த நாள்
26
அக்
2026
11:10
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா கச்சைகட்டியில் தெற்குத்தெரு சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அக்.23 விக்னேஸ்வரபூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. அக்.24 2,3ம் கால யாகசாலைபூஜை, வருண, சுதர்சன, ஹோமங்கள், கன்னிகா, தனலட்சுமி பூஜைகள் நடந்தன. அக்.25 காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார ஆராதனைகள் நடந்தன.
வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக்.23 விக்னேஸ்வரபூஜை, மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அக்.24 ஹரித்ரகணபதி பூஜை, சங்கலம்பம், குபேரஹோமம் நடந்தன. மாலையில் ருத்ர, சுதர்சன, கருட ஹோமங்கள் நடந்தன. அக்.25 காலை 8:15 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
சல்லகுளத்தில் பூர்ண, புஷ்பகலா தேவி சமேத அடைக்கலம் காத்த அய்யனார், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக்.23 விக்னேஸ்வர, மஹாலட்சுமி பூஜைகளுடன் தொடங்கியது. அக்.24 மஹாலெட்சுமி, நாராயண, கருட ஹோமங்கள் ஆசீர்வாத திருமுறைகள் நடந்தன. அக்.25 காலை 8:15 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.