ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள, ராகவேந்திரா கோவிலில், புரந்ததாஸர் ஆராதனை விழா நேற்று நடந்தது.தாஸர் சீனிவாசன் தலைமையில், பாதராஜ பஜனை மண்டலியின், 108 நாமசங்கீத கீர்த்தனைகள் பாடப்பட்டது.ராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அசோக் ஆனந்த், குமார், ராகவேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.