முத்து மாரியம்மன் கோவிலில் கட்கமாலா மகாமந்திர வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2013 12:02
ஊட்டி: ஊட்டி கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு துவங்கியது.ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் இருந்து ஒரு மாத காலத்துக்கு, அம்மனின் கற்பகிரகத்தில் சூரியன் ஒளி விழும் காட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு தை அமாவாசை தினமான நேற்று முன்தினம் முதல் இந்த காட்சி காணப்படுவதால், தினமும் காலை 6:50 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, கட்கமாலா மகாமந்திரம், சித்தர் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மருத்துவ கடவுளாக வழிப்படும் பராசக்திக்கு மூலிகைகளால் பூஜைகள் செய்வித்து நோயாளிகள் பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.பொதுதேர்வு எழுதும் மாணவ,மாணவியருக்கு தேக ஆரோக்கியம், நினைவாற்றல், தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற "ஹயக்கிரீவா வழிபாடுகள் நடத்தப்படுகிறது.அம்மை நோய் தாக்கியவர்களுக்கு பாரம்பரியாக மூலிகை எண்ணெய் காய்ச்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேம்ப் முத்துமாரியம்மன் கோவில் கமிட்டியினர், "மானஸ் அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.