சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயிலில் அன்னாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2026 12:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டப்பள்ளி யில் வீற்றிருக்கும் ஸ்ரீ சர்வமங்களா சமேத ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ வால்மீகேசுவர சுவாமியை அன்னபிரசாதம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட அன்னபிரசாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விவசாயம் நன்றாக இருக்கவும், மக்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கவும் இந்தப் பூஜை ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.சி.ஹன்ச ருத்ரையா, கே.ஸ்ரீனிவாசுலு நாயுடு, கே.கவிதா சந்திரசேகர், ஏ.ஹேமந்த்குமார், டி.நாகபூஷணம்மா மஸ்தான் மற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.