பதிவு செய்த நாள்
28
அக்
2026
11:10
புதுச்சேரி: அரியாங்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி, அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு, 12ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா மற்றும் 13ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 10ம் தேதி துவங்குகிறது.
இதையொட்டி, அன்று காலை 10:35 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் விரதம் துவங்கி, மகா தீபாராதனை நடக்கிறது. தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்குகிறார்.
தொடர்ந்து, 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு சம்ஹார வேல் அபிஷேகம், 12ம் தேதி மாலை 6:30 மணிக்கு சூரபதுமன் திக்கு விஜயம், 13ம் தேதி மாலை 6:30 மணிக்கு முருகபெருமான் சிவபூஜை செய்தல், முருகப்பெருமான் பெருமை சிறப்பு சொற்பொழிவு, 14ம் தேதி காலை 8:30 மணிக்கு அபிேஷக ஆராதனை, 36 முறை கந்தர் சஷ்டி கவசம் கூட்டு பிரார்த்தனை, மாலை 6:30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 15ம் தேதி காலை 10:35 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் ஊர்வலம், மாலை 4:30 மணிக்கு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. 16ம் தேதி காலை 9:05 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அமுல், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.