தர்மபுரி: பென்னாகரம் வட்டம செங்கனூர் ஊராட்சியில் கருங்கல்மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைரநாதர்(எ) காலபைரவர் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கங்கை பூஜை தீர்த்த குடங்கள் எடுத்தல் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு கணபதி பூஜை, கோ பூஜை செய்யப்பட்டு புனித நீர்களை யாகசாலையில் தீர்த்த குடகுகளாக வைத்து மகா ஓமம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று கலசங்களுக்கு வேதச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மங்கள இசை உடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்திற்கு குடமுழுக்கு என்று சொல்லப்படும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு புனித நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என்று தனி கோயில் உள்ளது. கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் மாவட்டத்தில் இரண்டாவதாக பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சி கருங்கல் மேடு கிராமத்தில் காலபைரவருக்கென தனி ஆலயம் உருவாக்கி உள்ளது இந்த கோவிலுக்கு இன்று குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பைரவர் புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை பங்காளிகள் விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.