திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல், விழாவில் வீதி உலாவில், சுவாமி அலங்காரம் செய்யப்பட உள்ள வாகனங்கள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர், பத்திரிசை அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள செப்17ல் பந்தகால் நடப்பட்டது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் அருகில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், அதிகாலை, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.