* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும். * பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே. * இளமையிலேயே கடவுளைத் தேடுபவன் பேறு பெற்றவன். * அம்மாவிற்கு வேண்டிய உதவிகளை செய். அதுவே மேலான தர்மம். * பிறரது கெட்ட குணத்தை பற்றி பேசினால் அந்தக் குணம் உனக்கும் வந்துவிடும். * நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய். * கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார். * ‘போதும்’ என்ற மனதுடன் செயல்படு. மகிழ்ச்சியாக இருப்பாய். * கடவுள் உன்னை எப்படி வைத்தாலும் அதை திருப்தியுடன் ஏற்றுக்கொள். * கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல். * நீ செய்த வினைகளுக்கு பயன்களை அனுபவித்தாக வேண்டும். * வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் அதை பொறுமையுடன் ஏற்றுக்கொள். * குறைவாக சாப்பிடு. கூச்சப்படாதே. * சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பெரிய விஷயம்கூட எளிதாகும். * குடும்பத்தினருக்கு மரியாதை கொடு. அதுவே உயர்ந்தது. * நீ சாப்பிடும் உணவை பொறுத்தே உனது குணம் அமையும்.