வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம்: காஞ்சி மஹாபெரியவர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2026 01:10
* ஒழுக்கமாக வாழ். அதுவே உன்னை முன்னேற்றும். * தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் விரும்புபவன் உத்தமன். * பேராசையால் செய்யும் செயல் பாவத்தில் தள்ளிவிடும். * எந்த செயலை செய்தாலும் அக்கறையுடன் செய். * போட்டி மனப்பான்மையை கைவிடு. மனம் அமைதி பெறும். * குழந்தையின் மனதில் பக்தியை விதைத்தால் அது முளைவிடும். * இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களில் ஈடுபடு. * மனசாட்சியின்படி நட. அதுவே சிறந்தது. * உன் வாழ்க்கைக்கு அடிப்படை தர்மம். * எல்லோரது உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார். * கடவுள் நாமத்தை சொல். நிம்மதி வரும். * பேச்சில் கவனமாக இருந்தால் பிரச்னை வராது. * அறிவு, அழகு, செல்வம் என உன்னிடம் எது இருந்தாலும், அதை நினைத்து கர்வப்படாதே. * நீ செய்த தர்மம் இக்கட்டான நேரத்திலும் கைகொடுக்கும். * பிறருக்கு அறிவுரை சொல்வதற்கு முன், அந்த தகுதி உனக்கு உள்ளதா என யோசி. * எதுவும் உன் கையில் இல்லை. எல்லாம் கடவுளின் செயல்.