Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி பாலதர்ம சாஸ்தா கோவில் ... பண்பொழி திருமலைகுமாரசுவாமி கோவிலில் ஆகம விதிகளை மீறியதாக புகார்! பண்பொழி திருமலைகுமாரசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

12 நவ
2026
11:11

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.


படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில், ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடமுடையான், மஹாகணபதிக்கு சன்னிதிகளும் உள்ளன. ஆகமவிதிப்படி இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கோவில் விமானம், முகத்வாரம், சன்னிதிகள் உள்ளிட்டவை அண்மையில் புனரமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நவ., 5ம் தேதி கும்பாபிஷேக விழா பந்தகால் நடப்பட்டது. 9ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை, வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, சயனாதிவாசம் பூர்ணாஹூதி சாற்றுமுறை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம் பூஜை, கும்பதிருவாராதனம், ஹோமம், 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 8:45 மணிக்கு கும்ப புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் விமான கலசத்தின் மீது ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar