காமாட்சி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு: கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2026 11:11
கோவை: கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் கல்யாண கோலத்தில் வள்ளி தேவசேனா சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.