திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா:தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2026 11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உச்சத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சந்திரசேகர் (உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்) மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவில், இன்று காலை, மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில், சந்திரசேகரர் சுவாமி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் நவ., 24ல் மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது