Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டி விழா பால்குடம் ஊர்வலம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
12:11

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது.

கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்த சஷ்டி விழா கோலாகாலமாக கொண்டாடப்படும்.

இந்தாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

காலை, 5:15 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பகல், 3:25 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரத்திற்காக, பச்சைநாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, வீரபாகு, குதிரை வாகனத்தில் வந்து தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் துாது சென்றார்.

அதன்பின் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகியோரை வதம் செய்தார். இறுதியாக சுப்பிரமணிய சுவாமி, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி, மரமாக மாறிய சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். அதன்பின், சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றிவாகை சூடும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, வீரபாகு ஆகியோருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின் சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘அரோகரா அரோகரா’, ‘வெற்றிவேல் வீரவேல்’ என, கோஷம் எழுப்பினர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மருதமலை மலைப்பாதையில் நேற்று, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில், 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கந்தசஷ்டி விழாவின், ஏழாம் நாளான இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உச்சத்தில் தங்க சூரிய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்-  சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று (16ம் தேதி காலை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar