அய்யப்ப சுவாமிக்கு உகந்த கார்த்திகை மாத பிறப்பையொட்டி, காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று மஹா அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜையும், கலச பூஜையும் நடந்தது. தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு, நெய், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தத்தால் மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு அய்யப்பன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அய்யப்பன் சஹஸ்ரநாமம், பஜனை, படிபஜையும், இரவு 8:30 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தது.