பேசும் சிவபெருமான் கோவில் கட்டுமான பணி மீண்டும் துவங்கப்படுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2026 10:11
சேத்தியாத்தோப்பு: சிவன் கோவில் கட்டுமானப்பணிகளை மீண்டும் விரைந்து துவங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வானமாதேவி கிராமத்தில் வீராணம் ஏரி மேல்கரையோரத்தில் பேசும் சிவபெருமான் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு விளைநிலங்கள் பல ஏக்கர் இருந்தும், போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து சேதம் அடைந்தது. கிராம மக்கள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்த தி.மு.க., ஆட்சியில் 1கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. இந்த கோவில் கட்டுமான பணி கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் அடிக்கல் நாட்டி துவங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆட்சி மாற்றத்தால் நிதி ஒதுக்துவதில் ஏற்பட்ட சிக்கல் அடிப்படையில் கட்டுமான பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
கோவில் வளாகத்தில் பழுதடைந்த யானை, குதிரைகள், நந்தி பகவான் சிலைகள் என கட்டுமானப்பணியை அப்படியே விட்டுள்ளனர். சுற்றிலும் மதில் சுவர் கட்டியுள்ள நிலையில் உள்ள அம்மன்கோவில், சிவபெருமான் கோவில் முழுவதும் புனரமைப்பு செய்து விமான கோபுரங்கள் கட்டாமல் கிடப்பில் போட்டுள்ளனர். கோவிலை பராமரிக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒராண்டிற்கும் மேலாக நடந்து வரும் கோவில் கட்டுமானப்பணி எப்போது முடிந்து கும்பாபிேஷகத்தை அரசு எப்போது நடத்தபோகிறது என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.