பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையா பகுதி, நுாற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய பகுதியாகும். அப்போது அங்கு வசித்து வந்த முன்னோர்கள், சிறிய கல்லை வைத்து வழிபட துவங்கினர். பின்னாளில், அந்த இடத்தில் விநாயகர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டி வணங்கி வந்தனர். தற்போது ஊர்மக்கள் ஒன்று கூடி, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலை உருவாக்கி உள்ளனர். இங்கு மூலவர் விநாயகரும், சிவபெருமான், அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகர், நவக்கிரஹம் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோவிலின் மஹா கும்பாபிஷகேம் வரும் 20ம் தேதி காலை 8:45 முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மதியம் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, விநாயகரின் அருள் பெறும்படி கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.