ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2026 01:11
திருத்தணி: சாய்பாபா கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடந்தன.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலையில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாய்பாபா, கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.