Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் சத்ய சாய் பாபா நூற்றாண்டு ... அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம் முழுதும் உள்ள கோவிலில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகம் முழுதும் உள்ள கோவிலில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
10:11

விழுப்புரம்

பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்திக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகார வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி பிரதோஷ நாயகரான நந்தியம் பெருமானுக்கு 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சின்னசேலம்

கங்காதீஸ்வரர் கோவிலில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ பூஜை நடந்தது.

கண்டாச்சிபுரம்

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு நந்தி தேவருக்கு பாலபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பின் கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதோஷ கால சுவாமிகள் ஊர்வலம் நடந்தது. இதில் திருத்தல இசை குழுவினர் இசையுடன் தேவார பாடல்கள் பாடப்பட்டது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ரெகுநாதபுரம்

ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள பழமையான ஆலமரத்தின் கீழ் நாக ஈஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை, நாமாவளி, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்டவை செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜைகளை ராமேஸ்வரம் சிவனடியே சிந்திக்கும் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் மற்றும் குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

திருவாடானை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.

பாகூர்

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத முதல் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு கார்த்திகை முதல் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், கோவில் கொடிமரம் எதிரே, அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

போடி

போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மலர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. திராளான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

திருப்பூர்

சிவாலயங்களில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு முந்தைய பிரதோஷம் என்பதால், நேற்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் மாலை 4:00 மணிக்கு மூலவர், அதிகார நந்தி, உமாமகேஸ்வரருக்கு மஹா அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. நந்தியம்பெருமானுக்கு பக்தர்கள் வில்வம், தாமரை உள்ளிட்ட மலர் மாலைகளை அணிவித்து வழிபட்டனர். பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெறலாம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம்

காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

தேவகோட்டை

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு அலங்கார பூஜைகளும், பிரதோஷ நாயனார் வீதி உலா நடந்தது. நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், ஐந்நூற்றீஸ்வரர் கோயில், கவுரி கைலாசநாதர் கோயில், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில், திருக்கயிலேஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

ஆர்.எஸ்.புரம்:


ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் வளர்பிறை பிரதோஷம் நேற்று மாலை நடந்தது. 4:30 மணிக்கு ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளானோர் தரிசித்தனர்.

கடலுார்

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 21 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர் கோவில் உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar