Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையாருக்கு அரோகரா: மலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சத்ய சாய்பாபா 101வது அவதார தினம்: மனிதநேயமே மகத்தான இறைத்தொண்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சத்ய சாய்பாபா 101வது அவதார தினம்: மனிதநேயமே மகத்தான இறைத்தொண்டு

பதிவு செய்த நாள்

23 நவ
2026
10:11

திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த காலத்தைக் கடந்து, அவரது சிந்தனைகளும் சேவைகளும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்து ஒளியேற்றினால், அந்த நுாற்றாண்டுக் கொண்டாட்டம் தனித்துவம் பெறுகிறது. அத்தகைய சிறப்புடன் அமைந்துள்ளது பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழா.


புட்டபர்த்தியில் 1926- நவ., 23-ம் தேதி அவதரித்த பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா, தன் வாழ்நாள் முழுதும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எண்ணற்ற சேவைகளைச் செய்தார். கல்வி, மருத்துவம், குடிநீர் என மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்ட அவரது பணிகள் இன்றும் உலகம் போற்றும் சேவைகளாகத் திகழ்கின்றன.


ஒன்றாம் வகுப்பு முதல் பல்கலை மேற்படிப்பு வரை இலவசக் கல்வி, புட்டபர்த்தி மற்றும் ஒயிட்பீல்டில் இலவச மருத்துவமனைகள், ராயலசீமா கிராமங்களுக்கும் சென்னைக்கும் குடிநீர் வசதி என அவரது சேவைகள், பல தலைமுறைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த தன்னலமற்ற அன்பால் உந்தப்பட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தின் சேவாதள தொண்டர்கள், அவரது நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டனர். கடந்த, 2025 நவ., 23-ம் தேதி தொடங்கிய நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவம், கல்வி, தொழில் பயிற்சி, கிராம மேம்பாடு, ரத்ததானம், மரம் வளர்ப்பு எனப் பல துறைகளில் சேவைகள் விரிவடைந்தன. அவற்றில் சில முக்கியப் பணிகள்...


திறன் பயிற்சி: மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீசத்ய சாய் திறன் மேம்பாட்டு மையங்கள் மூலம் பல்வேறு இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தாம்பூலப் பை, சோப்பு, ஊதுபத்தி தயாரித்தல், டேலி பயிற்சி, மின் தொழில், தச்சுத் தொழில், ஜப்பானிய மொழிப் பயிற்சி, நீட் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான பயிற்சிகள் இதில் அடங்கும்.தமிழகம் முழுதும், 75 மையங்களில் நடைபெற்ற இப்பயிற்சிகள் மூலம் 3,000-க்கும் அதிகமானோர் நேரடியாகப் பயனடைந்துள்ளனர். வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பல பெண்கள், இன்று தொழில் முனைவோராக உருவாகி, தங்கள் பொருளாதார நிலையை உயர்த்தியிருப்பது இத்திட்டத்தின் முக்கியப் பயனாக அமைந்துள்ளது.


மருத்துவ சேவை: கிராமப்புற மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீசத்ய சாய் நடமாடும் மருத்துவமனை சேவை விரிவுபடுத்தப்பட்டது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே, இ.சி.ஜி., ரத்தவியல் (ஹெமடாலஜி), நோயியல் பரிசோதனை, பயோ கெமிக்கல் பரிசோதனைக்கூடம், கண் மற்றும் பல் மருத்துவப் பிரிவுகள் எனப் பல வசதிகளுடன் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன.


மருத்துவர்கள் குழுவுடன் 30 கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் 54 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, கடந்த ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனையும் இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டன. டாக்டர் நாகராஜு, டாக்டர் மோகன் உள்ளிட்ட மருத்துவர்கள், தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர்கள், ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன நிர்வாகிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


கிராம சேவை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸ்ரீசத்ய சாய் சேவாதளத் தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு இலவச டியூஷன், மகளிருக்கு தொழில் பயிற்சி, மருத்துவச் சேவை, கால்நடை மருத்துவ முகாம்கள், மரம் நடுதல், உடல்நலம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு எனப் பல பணிகள் இதில் இடம்பெறுகின்றன.


தமிழகத்தின் 300 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இச்சேவைகளால் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் தத்தெடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் குடிநீர் வசதியின்றி தவித்த மக்களுக்காக, 2025 டிசம்பர் 21-ம் தேதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் கிடைத்து வருகிறது.


உயிர்காக்கும் தானம்


ரத்ததானம் உயிரைக் காக்கும் உன்னதமான சேவை. ரத்தம் தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவும் வகையில், ஸ்ரீசத்ய சாய் லிக்விட் லவ் திட்டத்தின் கீழ் அகில இந்திய அளவில் மூன்று லட்சம் ரத்ததானம் செய்வோர் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,090 பேர் பயனடைந்துள்ளனர்.


பசுமைப் பணி


உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு முக்கியமானது. இதை உணர்ந்து, ஸ்ரீசத்ய சாய் ப்ரேம தரு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும் மரக்கன்றுகள் நடும் பணி முன்னெடுக்கப்பட்டது.


மனிதநேயமே மகத்தான இறைத்தொண்டு! ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் தமிழகம் முழுதும் விரிந்த சேவைகள் கடந்த ஓராண்டில் சேவாதளத் தொண்டர்களால் 1,36,000 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மரம் நடுவதோடு நின்றுவிடாமல், அவற்றைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பையும் தொண்டர்கள் ஏற்றுள்ளனர்.


மாற்றுத்திறனாளிகள் சேவை


மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீசத்ய சாய் திவ்யாங்க ஜன சேவை தொடங்கப்பட்டது. 2025 ஜூலை 17-ம் தேதி புதுச்சேரி கவர்னர் முன்னிலையில் முதல்வரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான செயற்கை அவயங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதுவரை 119 பேர் பயனடைந்துள்ளதுடன், அவர்களுக்கு 123 செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டுள்ளன.


வாழ்வாதார உதவி


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரம் சாய் மையத்தில், குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீசத்ய சாய் ஜீவன் ஜோதி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் கீழ் தையல் இயந்திரங்கள், ஆரி கிட், நடைபாதை வியாபாரிகளுக்கான பெரிய குடைகள், ஓவன் கருவிகள், இஸ்திரிப் பெட்டிகள், இட்லி மாவு அரவை இயந்திரங்கள், பெரிய தோசைக்கற்கள், எலக்ட்ரிக்கல் டூல் கிட், தச்சுத் தொழில் கருவிகள், பூச்சிக்கொல்லி தெளிப்பான் கிட் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 550 பெண்களும், 250 ஆண்களும் பயனடைந்துள்ளனர்.


இளைஞர் விழிப்புணர்வு


உடல் ஆரோக்கியம், ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை மக்களிடம் வளர்க்கும் நோக்கில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து ஸ்ரீசத்ய சாய் ரன் அண்ட் ரைட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, வேலுார், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி என ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ. ஓட்டம் மற்றும் சைக்கிள் பயணம் இடம்பெற்றன. இதில் 7,500 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


அன்பின் ரதயாத்திரை


ஸ்ரீசத்ய சாய் பாபாவின் திருவுருவப்படம் தாங்கிய பிரம்மாண்டமான ப்ரேமரதம் யாத்திரை தமிழகம் முழுதும் நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் ரதத்தை வரவேற்றனர். பாலவிகாஸ் குழந்தைகள் நடனமாடியும், பகவானின் போதனைகளை விளக்கும் வீதி நாடகங்களை நிகழ்த்தியும் பக்திப் பரவசத்துடன் பங்கேற்றனர்.இதையொட்டி பிரத்யேகப் பாடல்களும் இயற்றப்பட்டு மாநிலம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. இதனுடன் ப்ரேம ப்ரவாஹினி நிகழ்வுகளும் பகவானின் அன்பு மற்றும் சேவைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தன.


பேரிடர் பயிற்சி


இயற்கைப் பேரிடர்களின்போது மக்களைக் காப்பாற்றும் நோக்கில், 2002-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி தொடங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களிலும் ஸ்ரீசத்ய சாய் இளைஞர்களிடையேயும் இப்பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது.


தமிழகம் உட்பட நாடு முழுவதும் பயிற்சி பெற்ற சேவாதளத் தொண்டர்கள், இயற்கை இடர்பாடுகளின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதையும், அவர்களின் துயரை குறைப்பதையும் இறைவனுக்குச் செய்யும் சேவையாகவே தொண்டர்கள் கருதுகின்றனர்.


தொடரும் தொண்டு


மருத்துவம், கல்வி, குடிநீர், தொழில் பயிற்சி, ரத்ததானம், மரம் வளர்ப்பு, மாற்றுத்திறனாளிகள் நலன் எனப் பல தளங்களில் ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனத்தின் பணிகள் விரிந்துள்ளன. இவை அனைத்தும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை: தேவைப்படுவோரின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்குவது. நுாற்றாண்டு விழா என்பது ஒரு கொண்டாட்டமாக மட்டுமின்றி, பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா போதித்த அன்பு, சேவை, தியாகம் ஆகியவற்றை செயல்களாக மாற்றிய ஓராண்டு பயணமாகவும் அமைந்துள்ளது. நுாறாண்டுகளைக் கடந்தும் அவரது சேவைச் சிந்தனைகள் தொடர்ந்து பலரது வாழ்வில் ஒளியேற்றுகின்றன. அந்த தொண்டு பயணமே, நுாற்றாண்டு பேசும் சாதனைகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இன்று 101வது அவதார தினம்


பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாள், இன்று ( நவ. 23) கொண்டாடப்படுகிறது. 1926-ம் ஆண்டு பிறந்த இவர், அன்பு, சேவை, மனிதநேயம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படை நெறிகளாக வலியுறுத்தினார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதகுல ஒற்றுமையைப் போதித்த அவரது கருத்துகளும், கல்வி, மருத்துவம், சமூக சேவையில் அவர் உருவாக்கிய பணிகளும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் நினைவுகூரப்படுகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
விழுப்புரம்பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar