வில்லியனுார் பெருமாள் கோவில் தங்க தேர் முலாம் பூசும் பணி: முதல்வர் நிதி வழங்கி துவக்கிவைப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 02:11
ல்லியனுார்: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவில் தங்க தேர் செய்யும் பணிக்கு முதல்வர் ரங்கசாமி, ஸ்தபதியிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
வில்லியனூரில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு ஸ்ரீ ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்கு முதற்கட்டமாக மரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. இரண்டாம் கட்டமாக தேரில் பொருத்துவதற்கான செப்புத் தகடுகளில் நகாஸ் மற்றும் வாட்டுமானம் வேலைப்பாடுகள் செய்தனர்.
மூன்றாம் கட்டப் பணியாக தற்போது செப்புத் தகடுகளில் நவீன எலக்ட்ரோபிளேட்டிங் தொழில்நுட்பம் மூலம் தங்க முலாம் பூசும் பணி மேற்கொள்ளுவதற்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கும்பகோணம் ராஜா சிற்பாலயா ஸ்தபதி ராஜகோபாலனிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.