Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடியார்களை தாய்போல் காப்பவர் சிவபெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அடியார்களை தாய்போல் காப்பவர் சிவபெருமான்

பதிவு செய்த நாள்

26 நவ
2026
02:11

திருப்பூர்: ‘அன்போடு வழிபடும் அடியார்களை, சிவபெருமான் தாய் போன்று காப்பான்,’ என சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.

கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் தொடர் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் வாரந்தோறும் நடைபெறுகிறது.

அவ்வகையில் நேற்று நடந்த வகுப்பில், கோவை சைவ சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது:

உயிர்கள் தங்களுக்குள் அன்பு காட்ட வேண்டும். குருநாதர், அடியார்கள் மீது அன்பு காட்ட வேண்டும் எனக் கூறும் மாணிக்கவாசக சுவாமி, இறைவன் மீதும் அன்பு கொண்டு வழிபட வேண்டும் என்கிறார். அவ்வாறு அன்புடன் வழிபடும் அடியார்களை சிவபெருமான் தாய் போல் காப்பான்.

‘போற்றி திரு அகவலில்’ வரும் ‘ஆடக மதுரை அரசே போற்றி, கூடல் இலங்கு குருமணி போற்றி’ என்ற வரிகளில், மதுரையை பொன்னாலான பூமி என்கிறார். கைலாயத்திலிருந்து மதுரைக்கு வந்து அரசனாகவும், சுந்தரபாண்டியனாகவும் நாட்டை ஆண்டதால் மதுரையை அவ்வாறு போற்றுகிறார்.

மதுரைக்கு கூடல் என்ற பெயரும் உண்டு. திருவிளையாடல் புராணத்தில், வருணன் மதுரையை அழிக்க கடலை மேகமாக்கி மழை பெய்யச் செய்தபோது, சிவபெருமான் மேகங்களைத் தடுத்து மதுரையில் மழை பெய்யாமல் காத்தார். அவர் நின்று தடுத்த இடமே நான்மாடக் கூடல் எனப்படுகிறது.

கூடல் என்பது சங்கமம், சங்கம் என்றும் பொருள்படும். சங்கம் வளர்த்த இடமாகவும், சங்கப் புலவர்களின் தலைவனாகவும் சிவபெருமான் இருந்ததால், ‘கூடல் இலங்கு குருமணி’ எனப் போற்றப்படுகிறார். குருமணி என்பது குருநாதர்களுக்கெல்லாம் குருநாதராக, குருக்களுள் மணிபோல் விளங்குபவர் எனப் பொருள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar