உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். தன் வளர்ச்சிக்கு சூரிய ஒளியையும், காற்றையும் நாடுகிறது. பூமிக்கடியில் நீரைத்தேடி வேர் விடுகிறது. வளர்ச்சிக்கு பிறரிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்த புல், கடைசியாக தன்னையே பிறருக்கு கொடுக்கிறது. இதன்மூலம் எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே என்னும் அடிப்படையை மனிதன் உணரவேண்டும். ஆனால், மனிதர்கள் சுயநலத்துடன் வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். பணஉதவி தான் என்றில்லை. ஒருவரால், எது முடியுமோ அதைக் கொடுக்கலாம். நல்ல சொல்லை, இதமான பாராட்டை, வழிதெரியாதவருக்கு விலாசத்தை, புரியாத மாணவருக்கு பாடத்தை- இப்படி முடிந்ததைச் செய்வது தான் பிறவி எடுத்ததன் பயன்.