ஆனைமலை: ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலில் நடந்த குரு பூஜை விழாவில், புதுச்சேரி முதல்வர் பங்கேற்று தரிசனம் செய்தார். கோவை மாவட்டம், ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலில், 107ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. நேற்று காலை, கொடிக்கம்பம் நடுதல், கஞ்சி பூஜை, காலை, மஹா அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்குதல், பக்தி இன்னிசை பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு திருமேனி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வழிபாடு செய்தார். இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வழிபாட்டில் பங்கேற்று சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். கோவில் வளாகத்தில் உள்ள, அப்பா பைத்தியசாமியை வழிபட்டார். அதன்பின், பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும், சாதுக்களுக்கு உடைகளும் வழங்கினார். அவருடன், த.மா.கா., நகர தலைவர் சுப்பராயன் மற்றும் பலர் பங்கேற்றனர்.