Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் பிரகாரத்தில் சாய்ந்த தேக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோம்நாத் கோவிலில் சங்காபிஷேகம் அவிநாசி பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோம்நாத் கோவிலில் சங்காபிஷேகம் அவிநாசி பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

29 நவ
2026
01:11

அவிநாசி: ஸ்ரீதர்மசாஸ்தா காசி யாத்திரை குழுவினர், நுாற்றுக்கும் மேற்பட்டோர், குஜராத் சென்று, ஜோதிர்லிங்க தரிசன யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக கருதப்படும், குஜராத் மாநிலத்தில், சோம்நாதர் மற்றும் நாகேஸ்வர் ஜோதிலிங்க கோவில்கள் அமைந்துள்ளது. அத்துடன், பாண்டவர்கள் வழிபட்ட கடற்கரை சிவலிங்க கோவில், பாவ்நகரில் அமைந்துள்ளது.

அவிநாசியில் இயங்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா காசி யாத்திரை குழுவினர், கடந்த 25 ம் தேதி முதல், 30 ம் தேதி வரை, ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக, குஜராத் யாத்திரை சென்றுள்ளனர். குஜராத் மாநிலம் சென்று, முதலில் துவாரகாவில் உள்ள நாகேஸ்வரம் கோவிலில், சங்காபிஷேகம், ருத்ராபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சோநாதர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து, கடலுக்குள் இருந்து ஐந்து சிவலிங்க திருமேனிகள் காட்சிதரும், நிஷ்களங்க் மகாதேவ் கோவிலில் வழிபட்டனர்.

புண்ணியம் பெறலாம்


இதுகுறித்து ஸ்ரீதர்ம சாஸ்தா காசி யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர சுப்பிரமணிய சிவம் கூறியதாவது:

ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக, 125 பக்தர்களுடன் குஜராத் வந்துள்ளோம். சோம்நாத், நாகேஸ்வரம் கோவில்களை தொடர்ந்து, பாண்டர்வகளுக்கு அருள்பாலித்த நிஷ்களங்க் மகாதேவ் கோவிலில் சிறப்பு யாகபூஜையுடன் வழிபாடு நடத்தினோம். மஹாபாரத போரில், பலரை கொன்ற பாவம் தொற்றியதால், பாண்டவர்கள் வருந்தனர்.

வெள்ளை பசு மற்றும் கொடியை வழங்கி, எந்த இடத்தில் கறுப்பு நிறமாக மாறுகிறோ அங்கு சிவபெருமான் காட்சியளித்து, பாவங்களை போக்குவார் என்ற கிருஷ்ண பகவான் வழிகாட்டினார். அவ்வாறு, பாண்டவர்கள் வரும் போது, கடற்கரை அருகே, பசுவும், கொடியும் கறுப்பு நிறமானது. கடலுக்குள் இருந்து, பஞ்ச லிங்க திருமேனிகள் காட்சியளித்தன.

பாண்டவர்களும் மனமுருகி வழிபட்டதால், பாவம் நீங்கப்பட்டனர். பாண்டவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான், கடலுக்குள் இருந்தபடி, இன்றும் அருள்பாலிக்கிறார். தினமும் குறிப்பிட்ட, 2 மணி நேரம் கடல் உள்வாங்கும் போது, பஞ்ச லிங்க திருமேனிகளை தரிசனம் செய்து புண்ணியம் பெறலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar