பழங்காலத்தில் திருமணமான ஆண்களின் அடையாளமாகவே மெட்டி இருந்தது. ஆனால், பிற்காலத்தில் மெட்டி பெண்களுக்குரிய ஆபரணமானது. தற்போதும் திருமணச் சடங்கில் பெண்ணின் சகோதரர் மணமகனுக்கு மெட்டி அணிவிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. மூன்றாம் நாளில் மணமகன் மறுவீடு செல்லும்வரை மெட்டி அணிவதுண்டு.