பதிவு செய்த நாள்
14
பிப்
2013
11:02
விருதுநகர்: விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில்,சாம்பல் புதன் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள், பிப்., 13 முதல் 40 நாட்கள்,சாம்பல் புதன் விரதம் இருப்பர். தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகளில், இயேசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கும். கடந்த ஆண்டு பெற்ற குருத்தோலைகளை எரித்து சாம்பாலாக்கி, சாம்பலை நெற்றியில் பூசி விரதத்தை துவக்குவர். விருதுநகர் இன்னாசியார் ஆலயத்தில், விருதுநகர் மறை வட்ட அதிபர் ஞானப்பிரகாசம், துணைப்பாதிரியார் முரளி ஆனந்த் ஆகியோர், நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, தவக்காலத்தினை துவக்கி வைத்தனர். பாண்டியன் நகர் சவேரியார் ஆலயத்தில் பாதிரியார்கள் ஜேசுராஜ், டி.அமிர்தராஜன், ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதிரியார் ஜான் மார்ட்டின் சாம்பலில் சிலுவை அடையாளத்தை நெற்றியில் இட்டு, தவக்காலத்தை துவக்கி வைத்தனர். தென்னிந்திய திருச்சபை, சுவிசேஷ லுத்திரன் திருச்சபை உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.