வாழ்வில் செய்ய வேண்டிய, கூடாத விஷயங்களை வேதம் பட்டியல் இடுகிறது. இவற்றை ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதத்தில் தான் இது என்ன வேதவாக்கா? என்ற சொல்வழக்கு மக்களிடம் வழங்கப்படுகிறது. வேதத்தில் ஸுஹ்ருத் சம்ஹிதா என்ற பகுதி இருக்கிறது. இதற்கு நண்பனைப் போல நல்வழிகாட்டுபவை என்று பொருள். இதை இப்படி செய்தால் நன்மை, இப்படி செய்தால் தீமை என்பதை உதாரணத்துடன் விளக்குகிறது. புராண, இதிகாசப் பகுதிகள் இந்த சம்ஹிதையில் அடங்கியுள்ளன.