மனிதனின் உயிர் பிரியும் நேரத்தை அந்திமவேளை என்பர். கிருஷ்ணர் பகவத் கீதையில், அந்திமவேளையில் என்னை நினைத்துக் கொண்டு இருப்பவன் என்னையே அடைகிறான். இறப்பு எப்போது வரும் என்பதை அறியமுடியாது. அதனால், எப்போதும் மனதை என்னிடம் செலுத்துவாயாக. அப்போது என் திருவடிகளை அடைவாய்! என்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தார். இரண்யன், கடைசிநேரத்தில் உக்கிரவடிவில் இருந்த நரசிம்மரைத் தரிசித்து உயிர் நீத்தான். அடுத்த பிறவியில் அரக்கர் குலத்தில் ராவணனாக பிறந்தான். ராவணன் போர்க்களத்தில் ராமனை பார்த்து உயிர்விட்டான். அடுத்த பிறவியில் சிசுபாலன் என்னும் அரசனாகப் பிறந்தான். சிசுபாலன் கிருஷ்ணரைத் தரிசித்து உயிர் விட்டான். வைகுண்டத்தில் துவார பாலகனாகும் பாக்கியம் பெற்றான். பொல்லாதவராய் பிறந்தவருக்கே கடைசி நேரத்தில் தெய்வதரிசனம் கிடைத்ததால், முக்தி என்றால், நல்லவர்களுக்கு கேட்கவா வேண்டும்! எப்போதும் தெய்வ சிந்தனையுடன் இருங்கள்.