பதிவு செய்த நாள்
22
பிப்
2013
11:02
புதுச்சேரி: வைத்திக்குப்பத்தில், மாசி மக கடல் தீர்த்தவாரி திருவிழா, வரும் 25ம் தேதி நடக்கிறது. விழாக் கமிட்டி தலைவர் வினோபாஜி நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும், மாசிமக கடல்தீர்த்தவாரி விழா, வரும் 25ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்த்தவாரியில், செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர் மற்றும் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில், பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர். அதே போல் போலீஸ் துறை அதிகாரிகள், சட்ட விரோத செயல்களை தடுக்க பல இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்கின்றனர். மேலும் பொது மக்களுக்காக குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சுவாமிகளை தரிசனம் செய்ய, விழாக் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.