புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடத்தின் 49ம் ஆண்டு மாசிமக பஜனை விழா மற்றும் 5ம் ஆண்டு கடல் தீர்த்தவாரி உற்சவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடம் 49ம் ஆண்டு மாசிமக பஜனை மற்றும் 5ம் ஆண்டு கடல் தீர்த்தவாரி உற்சவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அன்று காலை 5 மணிக்கு வைத்திக்குப்பம் கடல் தீர்த்தவாரியில் ராதா ருக்மிணி சமேத பக்தவத்ஸல குண பாண்டுரங்கன் தாயார், ஆண்டாள், சீனிவாசன் அலங்காரத்தில் பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 7 மணிக்கு கடல் தீர்த்தவாரிக்குச் சென்று மாலை 5 மணிக்கு மீண்டும் பஜனைக் கூடத்திற்கு வந்தடைகிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கருடசேவையில் வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடத்தின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வேங்கடாசலபதி பஜனைக் கூடம் குழுவினர் மற்றும் வைத்திக்குப்பம் பொதுமக்கள் செய்கின்றனர்.