பதிவு செய்த நாள்
27
பிப்
2013
10:02
அவிநாசி: அவிநாசியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், 65வது ஆண்டு உற்சவ சாட்டு திருவிழா நடந்தது. விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, சக்தி சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தை சேர்ந்த அலகு (கத்தி) வீரர்கள், அலகு சேவையுடன் ஊர்வலம் நடந்தது. சாமுண்டி அழைத்தல், அபிஷேக ஆராதனை, அலங்கார சிறப்பு பூஜை ஆகியன நடந்தது. விழா நிறைவு நாளில், திவ்யநாம பஜனையுடன் மாவிளக்கு எடுத்தல், மஹா தீபாராதனை, சிறப்பு வழிபாடு ஆகியன நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை சிறப்பு அலங்காரத்தில், சவுடாம்பிகை அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி வீரகுமாரர்கள் குழுவினரின் அலகு சேவையும் நடந்தது. பெரிய தனம் மாணிக்கம், செட்டிமை சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.